தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 85.97 கன அடியாக சரிவு

Published On 2023-07-05 09:22 IST   |   Update On 2023-07-05 09:22:00 IST
  • மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி திறக்கப்படுகிறது.
  • நீர்வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து விநாடிக்கு 700 கன அடியாக நீடிக்கிறது.

அதே சமயம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 163 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 188 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி திறக்கப்படுகிறது.

நீர்வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 86.77 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 85.97 கன அடியாக சரிந்துள்ளது.

Tags:    

Similar News