தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம்

Published On 2023-11-05 09:05 IST   |   Update On 2023-11-05 09:05:00 IST
  • அணைக்கு வினாடிக்கு 1845 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
  • அணையில் இருந்து குடிநீருக்காக தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சேலம்:

மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும், தொடர்ந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதையடுத்து கடந்த மாதம் 10-ந் தேதியுடன் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53.32 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1845 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே காவிரிஒழுங்காற்று குழு உத்தரவுப்படி கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு இன்னும் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

Tags:    

Similar News