தமிழ்நாடு செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 147 கன அடியாக சரிவு
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 2,100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- தண்ணீர் வரத்தை விட நீர்திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1200 கனஅடியாக உள்ளது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று 389 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 147 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 2,100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தண்ணீர் வரத்தை விட நீர்திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 47.04 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 46.73 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 15.81 டி.எம்.சியாக உள்ளது.