தமிழ்நாடு

கோயம்பேடு, தாம்பரத்தில் முன்பதிவு செய்தவர்கள் கவனத்திற்கு...

Published On 2023-12-31 06:56 GMT   |   Update On 2023-12-31 06:56 GMT
  • இன்று முதல் ஜனவரி 30 வரை முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை மேற்கொள்ளலாம்.
  • விழுப்புரம், கும்பகோணம் மற்றும் சேலம் பேருந்துகள் ஜனவரி 15-ம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து வழக்கம் போல இயங்கும்.

சென்னை:

கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பில் ரூ.400 கோடி செலவில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதையடுத்து பேருந்து முனையம் முழுமையாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்று காலை முதல் வந்துள்ளது.

இந்நிலையில், அரசு விரைவு பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரத்தில் முன்பதிவு செய்த பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரையான கட்டணம் அவரவர் வங்கிக் கணக்கில் திருப்பி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு பதில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

இன்று முதல் ஜனவரி 30 வரை முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை மேற்கொள்ளலாம்.

விழுப்புரம், கும்பகோணம் மற்றும் சேலம் பேருந்துகள் ஜனவரி 15-ம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து வழக்கம் போல இயங்கும்.

பெங்களூரு நெடுஞ்சாலை, ஈசிஆர் வழியாக இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேட்டில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News