தமிழ்நாடு

ஆம்பூரில் தோல் தொழிற்சாலையில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

Published On 2023-01-20 05:29 GMT   |   Update On 2023-01-20 05:29 GMT
  • சென்னை வருமான வரித்துறை முதன்மை அதிகாரி சந்தோஷ் தலைமையில் 4 காரில் வந்த 15 வருமானவரித்துறை அதிகாரிகள் கோமேஸ்வரம் ஏ.கஸ்பாவில் உள்ளே 2 தோல் தொழிற்சாலையில் அதிரடியாக நுழைந்தனர்.
  • தொழிற்சாலைகளில் உள்ள பதிவேடுகள், கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சோதனை நடத்தி வருகிறார்கள்.

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கொமேஸ்வரம் மற்றும் ஆம்பூர் டவுன் ஏ.கஸ்பா பகுதியில் தனியார் தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

ஆம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் இங்கு பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் சென்னை வருமான வரித்துறை முதன்மை அதிகாரி சந்தோஷ் தலைமையில் 4 காரில் வந்த 15 வருமானவரித்துறை அதிகாரிகள் கோமேஸ்வரம் ஏ.கஸ்பாவில் உள்ளே 2 தோல் தொழிற்சாலையில் அதிரடியாக நுழைந்தனர்.

தொழிற்சாலை கதவை பூட்டி சாவிகளை தங்கள் வசம் வைத்துக்கொண்டனர். மேலும் நிறுவன மேலாளர்களின் செல்போன்களையும் வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர். தொழிலாளர் மூலம் தகவல் வெளியே பரவுவதை தடுக்க ஜாமர் கருவிகள் வைத்து செல்போன் செயல் இழக்க செய்தனர்.

தொழிற்சாலைகளில் உள்ள பதிவேடுகள், கணக்கு விவரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சோதனை நடத்தி வருகிறார்கள். இன்று 2-வது நாளாக வருமான வரித்துறையினரின் சோதனை நீடித்தது.

ஏற்கனவே கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆம்பூரில் உள்ள 15 தோல் தொழிற்சாலையில் வருமானவரித்துறையினர் 6 நாட்களுக்கும் மேலாக சோதனை நடத்தினர். இந்த நிலையில் மீண்டும் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News