தமிழ்நாடு செய்திகள்

ஹெல்மெட் அணியாவிட்டால் நடவடிக்கை- போலீசாருக்கு டி.ஜி.பி. எச்சரிக்கை

Published On 2022-12-23 10:45 IST   |   Update On 2022-12-23 11:48:00 IST
  • ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படு
  • பொதுமக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய போலீசாரில் பெரும்பாலானோர், ஹெல்மெட் அணிவது இல்லை என, தெரிய வந்துள்ளது.

சென்னை:

'ஹெல்மெட்' அணியாமல், இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர், 'ஹெல்மெட்' அணிவது கட்டாயம். மீறுவோருக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால், சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில், 90 சதவீதம் பேர், ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுகின்றனர்.

பின், இருக்கையில் அமர்ந்து செல்வோரில், 10 சதவீதம் பேர் தான் ஹெல்மெட் அணிகின்றனர் என, போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர். கிராமங்கள் மற்றும் அதை ஒட்டியுள்ள, சிறு நகர பகுதிகளில், ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

பொதுமக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய போலீசாரில் பெரும்பாலானோர், ஹெல்மெட் அணிவது இல்லை என, தெரிய வந்துள்ளது. இதனால், ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வந்த போலீசாரிடம், வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும். ஹெல்மெட் வாங்கிவந்து காண்பித்த பின் தான், வாகனத்தை ஒப்படைக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

 வாகன சோதனையில் ஈடுபடும், போக்குவரத்து மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசாருக்கு, மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 'போலீஸ்' என்ற அடையாளத்தை காரணமாக கூறி, வாக்குவாதம் செய்வோர் மீது, வழக்கு பதிந்து, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'ஹெல்மெட் அணியாமல், இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் மீது துறை ரீதியாக மட்டு மல்லாமல், வழக்கு பதிவும் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

Tags:    

Similar News