தமிழ்நாடு செய்திகள்
மெரினாவில் உள்ள திருவள்ளுவர் படத்திற்கு மரியாதை செலுத்தினார் கவர்னர் ஆர்.என்.ரவி
- மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் கவர்னர் ஆர்.என்.ரவி.
- வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை:
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதன்படி, சென்னை மெரினாவில் உள்ள திருவள்ளுவர் படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.
மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் கவர்னர் ஆர்.என்.ரவி.
முன்னதாக, வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.