தமிழ்நாடு

பல் பிடுங்கிய விவகாரம்: சமூக வலைதளங்களில் வைரலாகும் மீம்ஸ் வீடியோக்கள்

Update: 2023-03-28 05:07 GMT
  • டாக்டர் முன்பு இருக்கும் பெயர் பலகையில் பல்வீர்சிங் என எழுதப்பட்டு காட்சிகள் வைரலாகி வருகிறது.
  • வடிவேலு டாக்டர் போல் நடித்த காட்சியில் பல் வலியால் வரும் நபருக்கு கட்டிங் பிளேடு மூலமாக பல்லை பிடுங்கும் காட்சிகள் எடுக்கப்பட்டு அதில் கைதி, போலீஸ் என பெயர் எழுதப்பட்டுள்ளது.

அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங், குற்றசெயல்களில் ஈடுபட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அவரை உடனடியாக கைது செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காமெடி மீம்ஸ் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சினிமா ஒன்றில் நகைச்சுவை நடிகர் வடிவேலு டாக்டர் போல் நடித்த காட்சியில் பல் வலியால் வரும் நபருக்கு கட்டிங் பிளேடு மூலமாக பல்லை பிடுங்கும் காட்சிகள் எடுக்கப்பட்டு அதில் கைதி, போலீஸ் என பெயர் எழுதப்பட்டுள்ளது.

மேலும் டாக்டர் முன்பு இருக்கும் பெயர் பலகையில் பல்வீர்சிங் என எழுதப்பட்டு காட்சிகள் வைரலாகி வருகிறது. உங்கள் ஈறுகளில் பிரச்சினையா அம்பை போலீஸ் நிலையத்துக்கு வாங்க என்ற வாசகத்துடன் அந்த பகுதி பொதுமக்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

Tags:    

Similar News