தமிழ்நாடு செய்திகள்
கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
- மீன்களின் இறப்புக்கான காரணம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
- கோவில் குளத்தில் மீன்கள் இறந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை :
சென்னையில் மிகவும் பிரசித்த பெற்றது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இக்கோவிலை ஒட்டி குளம் ஒன்றும் உள்ளது. இக்குளத்தில் தேரோட்டம் நடைபெறும். குளத்தில் உள்ள மீன்களுக்கு பக்தர்கள் உணவளிப்பர்.
இந்நிலையில், கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்தது. இதனை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
மீன்களின் இறப்புக்கான காரணம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். கோவில் குளத்தில் மீன்கள் இறந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.