தமிழ்நாடு

வீடுகள் முன்பு கருப்புக்கொடி கட்டப்பட்டுள்ள காட்சி


தேயிலைக்கு உரிய விலை வழங்க கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி விவசாயிகள் போராட்டம்

Published On 2022-06-27 06:04 GMT   |   Update On 2022-06-27 06:04 GMT
  • கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் தேயிலை பயிரிட்டுள்ளனர்.
  • உரிய விலை கிடைக்காததால் சில விவசாயிகள் பறித்த தேயிலைகளை சாலையோரம் மற்றும் தோட்டங்களிலும் கொட்டி வரும் நிலை காணப்படுகிறது.

அரவேணு:

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. சிறு, குறு தேயிலை விவசாயிகள் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் விவசாயிகள் தேயிலை பயிரிட்டுள்ளனர். அவர்கள் தங்கள் தோட்டங்களில் விளையும் பச்சை தேயிலைகளை பறித்து தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக தேயிலை வாரியம் விலை நிர்ணயித்துள்ளது.

ஆனால் தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலை வாரியம் நிர்ணயித்த விலையில் விவசாயிகளிடம் இருந்து தேயிலையை கொள்முதல் செய்வதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். அந்தந்த தேயிலை தொழிற்சாலைகள் தங்களுக்குள்ளாகவே ஒரு விலையை நிர்ணயம் செய்து, விவசாயிகளிடம் இருந்து தேயிலை பெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

உரிய விலை கிடைக்காததால் சில விவசாயிகள் பறித்த தேயிலைகளை சாலையோரம் மற்றும் தோட்டங்களிலும் கொட்டி வரும் நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில், பச்சை தேயிலை உரிய விலைக்கு கொள்முதல் செய்ய வலியுறுத்தியும், தேயிலை வாரியத்தை கண்டித்தும் அரவேணு, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேயிலை விவசாயிகள் தங்கள் வீடுகளில் கருப்பு கொட்டி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி கட்டப்பட்டுள்ளது.

இதேபோல் தும்மனட்டி, கக்குச்சி பகுதிகளில் தேயிலைக்கு உரிய விலை கேட்டு விவசாயிகள் ஊர்வலமாக பேரணி வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News