தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- வரும் 19ம் தேதி மநீம தலைவர் கமல்ஹாசன் பிரசாரம்

Published On 2023-02-11 04:15 GMT   |   Update On 2023-02-11 05:39 GMT
  • காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறும் வகையில் அக்கட்சியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
  • ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளராக களம் இறங்கும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்தள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன், பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்து வகையான தேர்தல்களையும் சந்தித்து விட்டார்.

ஆனால் வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. கட்சி தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து காய் நகர்த்தி வருகிறது. காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறும் வகையில் அக்கட்சியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

தனித்து போட்டியிட்டு மக்கள் மத்தியில் சொல்லிக்கொள்ளும்படி வாக்கு சதவீதத்தை பெற்றிருக்கும் கமல்ஹாசனின் கவனம் கூட்டணி அரசியலை நோக்கி நகர்ந்து உள்ளது.

இதை தொடர்ந்தே ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு அவர் ஆதரவு தெரிவித்து உள்ளார். இதை தொடர்ந்து, ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

அதன்படி, பிப்ரவரி முதல் அல்லது 2வது வாரத்தில் பிரசாரத்தை தொடங்க கமல் திட்டமிட்டுள்ளைதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வரும் 19ம் தேதி மநீம தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய இருக்கிறார்.

Tags:    

Similar News