தமிழ்நாடு செய்திகள்

அமோனியா வாயு கசிவு விவகாரம்... அறிக்கை வெளியிட்ட நிறுவனம்

Published On 2023-12-27 09:37 IST   |   Update On 2023-12-27 09:37:00 IST
  • தற்போது அமோனியா கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
  • பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

சென்னை:

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் திடீரென அமோனியம் வாயு வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தனியார் உர தொழிற்சாலை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நேற்றிரவு 11.30 மணியளவில் அமோனியா இறக்கும் சப்ளை பைப் லைனில் கசிவு ஏற்பட்டது. தற்போது அமோனியா கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

அமோனியா அமைப்பு வசதியை தனிமைப்படுத்தி குறுகிய காலத்தில் நிலைமையை இயல்பு நிலைக்கு கொணடு வந்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News