தமிழ்நாடு செய்திகள்

இ.பி.எஸ். துரோகத்திற்கு பாராளுமன்ற தேர்தலில் பதிலடி- தினகரன்

Published On 2024-02-04 14:36 IST   |   Update On 2024-02-04 14:36:00 IST
  • தமிழகத்தில் தீய சக்திக்கும் துரோக சக்திக்கும் மாற்றாக நமது இயக்கம் உருவாகி வருகிறது.
  • சொத்து வரி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

திண்டுக்கல்:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று திண்டுக்கல் வந்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தீய சக்திக்கும் துரோக சக்திக்கும் மாற்றாக நமது இயக்கம் உருவாகி வருகிறது. எம்.ஜி.ஆர். உருவாக்கி ஜெயலலிதா வளர்த்தெடுத்த அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம். சில வியாபாரிகளுக்கு நான் அமைச்சர் பதவி பெற்றுத்தந்தேன். ஆனால் அவர்கள் துரோகிகளாக மாறி விட்டனர். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பண பலத்தால் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறலாம் என கனவு காண்கிறார். ஆனால் இதில் நாங்கள் அவருக்கு பதிலடி கொடுப்போம். மின் கட்டணம், சொத்து வரி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதற்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள். தி.மு.க.வினர் ரூ.1000 கொடுத்து மக்களின் ஓட்டை விலைக்கு வாங்க பார்க்கின்றனர். அதற்கான பதிலை மக்கள் தேர்தலில் அளிப்பார்கள். குக்கர் சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே இயக்கத்தை மீட்டெடுக்க முடியும் என்பதால் வருகிற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Similar News