தமிழ்நாடு செய்திகள்

2100-ம் ஆண்டுக்குள் சென்னை கடலில் மூழ்குமா?- ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

Published On 2023-03-05 12:49 IST   |   Update On 2023-03-05 12:49:00 IST
  • நீர்மட்ட உயர்வில் பிராந்திய அளவில் காணப்படும் வேறுபாடுகளால் நீர் மட்ட அளவும் மாறுபடும்.
  • சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் மிக அதிகமான நீர் இடப்பெயர்வாகும்.

சென்னை:

காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை சார்ந்த காலநிலை மாறுபாடு ஆகிய இரண்டின் கூட்டுவிளைவு பூமிக்கு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக ஆய்வுகள் செய்துவரும் விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளார்கள். அதில் இந்தியாவில் உள்ள பெருநகரங்களான சென்னை, கொல்கத்தாவுக்கு மிகப்பெரிய ஆபத்து வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்பநிலை அதிகரிப்பால் நீர் விரிவடைந்து கடல் நீர்மட்டம் உயர்கிறது. இதுதவிர துருவ பாறைகளால் அதிக அளவு கடலில் சேரும் தண்ணீரால் கடல் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.

இந்த நீர்மட்ட உயர்வில் பிராந்திய அளவில் காணப்படும் வேறுபாடுகளால் நீர் மட்ட அளவும் மாறுபடும். சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் மிக அதிகமான நீர் இடப்பெயர்வாகும்.

இதன் காரணமாக கடற்கரையை ஒட்டியிருக்கும் நகரங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் என்று அந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

அதில் ஆசிய பகுதியில் உள்ள 6 நகரங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கலாம். கடல் நீரில் மூழ்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. அதில் இந்தியாவில் சென்னை, கொல்கத்தா ஆகிய இரு நகரங்களும் ஆபத்தில் உள்ளன.

இதேபோல் தாய்லாந்தில் பாங்காக், இந்தோனேசியாவில் மணிலா, மியான்மரில் யாங்கோன், வியட்நாமில் ஹோசி மின்சிட்டி ஆகிய நகரங்கள் அடங்கி உள்ளன. 2100-ம் ஆண்டுக்குள் இந்த நகரங்கள் அனைத்தும் கடல் நீரால் மூழ்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News