தமிழ்நாடு

சென்னை-பெங்களூரு டபுள் டக்கர் ரெயில் தடம் புரண்டது

Published On 2023-05-15 07:51 GMT   |   Update On 2023-05-15 07:51 GMT
  • இரண்டு சக்கரங்கள் கீழே இறங்கியதால் பயங்கர சத்தம் கேட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது.
  • பெங்களூரு ரெயில் தடம்புரண்டுள்ள நிலையில், அந்த வழியாகச் செல்லும் ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

ஜோலார்பேட்டை:

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 7.25 மணிக்கு பெங்களூருக்கு டபுள் டக்கர் ரெயில் புறப்பட்டு சென்றது.

ஆந்திர மாநிலம் குப்பம் ரெயில் நிலையத்தை கடந்து சென்றது. காலை 11.21 மணிக்கு பங்காருபேட்டை அருகே உள்ள சி.சி. நத்தம் என்ற இடத்தில் சென்ற போது ரெயிலின் கடைசி பெட்டியான சி1 பெட்டி தண்டவாளத்தில் இருந்து புரண்டது. இரண்டு சக்கரங்கள் கீழே இறங்கியதால் பயங்கர சத்தம் கேட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து குப்பம் மற்றும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் அவதியடைந்தனர்.

பெங்களூரு ரெயில் தடம்புரண்டுள்ள நிலையில், அந்த வழியாகச் செல்லும் ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News