தமிழ்நாடு செய்திகள்

வீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பை தடுத்து நிறுத்திய வளர்ப்பு பூனை: சமூகவலைதளத்தில் வீடியோ வைரல்

Published On 2023-11-22 16:25 IST   |   Update On 2023-11-22 16:25:00 IST
  • நாகப்பாம்பு வீட்டுக்குள் நுழைய முயல்வதும், இதனை வளர்ப்புப்பூனை சீறியபடி தடுக்க முயல்வதும் தெரியவந்தது.
  • சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

கோவை:

கோவை கவுண்டம்பாளையம், சரவணாநகரை சேர்ந்தவர் விஜர். இவர் தனது வீட்டில் பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் விஜர் குடும்பத்தினர் சம்பவத்தன்று வீட்டில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது விஜர் வீட்டு வளாகத்தில் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது.

தொடர்ந்து அந்த பாம்பு வீட்டுக்குள் நுழைய முயன்றது. இதற்கிடையே அங்கு நின்றிருந்த வளர்ப்பு பூனை தற்செயலாக நாகப்பாம்பை பார்த்தது. அது உடனடியாக பாம்பை நோக்கி சீறிக்கொண்டு வந்தது. இருந்தபோதிலும் அந்த பாம்பு வீட்டுக்குள் நுழைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. வீட்டு வாசலில் பூனையின் சீறலை தற்செயலாக கேட்ட விஜர் குடும்பத்தினர் உடனடியாக அங்கு வந்து பார்த்தனர். அப்போது நாகப்பாம்பு வீட்டுக்குள் நுழைய முயல்வதும், இதனை வளர்ப்புப்பூனை சீறியபடி தடுக்க முயல்வதும் தெரியவந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உடனடியாக வீட்டுக்கதவை மூடினர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். பாம்பு வீட்டுக்குள் நுழைய முயல்வதையும், அதனை பூனை தடுத்து நிறுத்துவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அந்த காட்சியை செல்போனில் படம் பிடித்தனர்.

பூனையின் எதிர்ப்பால் பாம்பு அடங்கி அங்கிருந்து வெளியேறிச் சென்றது. இந்த காட்சிகளை வீடியோ எடுத்த சிலர் அதனை இணையத்தில் பரப்பினர். தற்போது சமூகவலை தளத்தில் அந்த காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News