தமிழ்நாடு

எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட 1000 பேர் மீது வழக்கு

Published On 2022-07-22 06:16 GMT   |   Update On 2022-07-22 07:05 GMT
  • டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனியா நேற்று ஆஜர்ஆனார்.
  • கே.எஸ். அழகிரி உள்பட 250-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை:

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரிப்பதற்காக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

அதன்படி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனியா நேற்று ஆஜர்ஆனார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் நேற்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடத்திய கே.எஸ். அழகிரி உள்பட 250-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக கே.எஸ். அழகிரி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, எம்.எல்.ஏ,க்கள் செல்வ பெருந்தகை, ரூபி மனோகரன், பிரின்ஸ், ராஜேஷ் குமார் மற்றும் மாவட்ட தலைவர்கள் உள்பட 1000 பேர் மீது எழும்பூர் போலீ சார் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

அவர்கள் மீது சட்டவிராதோமாக 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News