தமிழ்நாடு

அவன் இவன் பட குத்தாட்ட பாடலுக்கு பெண் வேடமணிந்து நடனமாடிய சிறுவன்

Published On 2023-05-16 05:33 GMT   |   Update On 2023-05-16 05:33 GMT
  • ‘டியோ டியோ டோலே’ பாடலில் விஷால் பெண் வேடமிட்டு நடனமாடி இருப்பார்.
  • திருச்சியை சேர்ந்த தஷ்வந்த் என்ற சிறுவன் தான் தனது பள்ளி விழாவில் பெண் வேடமணிந்து ஆடி உள்ளார்.

சமூக வலைதளங்களில் தினமும் ஏராளமான வீடியோக்கள் பகிரப்பட்டாலும் அதில், ஒரு சில வீடியோக்கள் மட்டுமே வைரலாகி விடுகிறது. அந்த வகையில் 'அவன் இவன்' படத்தில் உருவான 'டியோ டியோ டோலே' என்ற குத்தாட்ட பாடலுக்கு சிறுமி ஒருவர் நடனமாடும் வீடியோ தற்போது வலைதலங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் ஒரு புதிர் உள்ளது. நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்களா என்ற கேப்ஷனுடன் பரவி வரும் அந்த வீடியோ அதிக பார்வைகளை பெற்று வருகிறது. 'டியோ டியோ டோலே' பாடலில் விஷால் பெண் வேடமிட்டு நடனமாடி இருப்பார். அதுபோல சிறுவன் ஒருவன் பெண் போல வேடமிட்டு ஆடி உள்ளார். திருச்சியை சேர்ந்த தஷ்வந்த் என்ற சிறுவன் தான் தனது பள்ளி விழாவில் இவ்வாறு ஆடி உள்ளார். இந்த வீடியோ காட்சி இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News