தமிழ்நாடு செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டுடன் வங்கதேச வாலிபர் கைது
- விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
- சில மாதங்களுக்கு முன்பு, இந்தியாவிற்குள் சாலை வழியாக வந்து, இங்கு ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுத்து, இந்திய போலி பாஸ்போர்ட் வாங்கியது தெரிய வந்தது.
ஆலந்தூர்:
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, வங்கதேச தலைநகரம் டாக்கா செல்லும் பயணிகள் விமானம், புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
அப்போது அந்த விமானத்தில், சென்னையில் இருந்து டாக்கா செல்ல வந்த, ஹையூல் அலி முகமது ஷேக் (28) என்பவர் போலி பாஸ்போர்ட்டில் வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரது பயணத்தை ரத்து செய்து அவரை கைது செய்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு, இந்தியாவிற்குள் சாலை வழியாக வந்து, இங்கு ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுத்து, இந்திய போலி பாஸ்போர்ட் வாங்கியது தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.