தமிழ்நாடு செய்திகள்

ராதாபுரத்தில் கம்பராமாயணம் பாடலை பாடி அசத்தும் 3-ம் வகுப்பு சிறுவன்

Published On 2022-12-21 12:41 IST   |   Update On 2022-12-21 12:41:00 IST
  • ராதாபுரம் கணபதி நகரில் காமராஜ்-கவுசல்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
  • ஸ்ரீசெல்வக்ரிஷ் 1-ம் வகுப்பில் இருந்தே பேச்சு போட்டியில் கலந்து கொண்டு பேசி ஏராளமான பரிசுகளை வாங்கி உள்ளார்.

பணகுடி:

ராதாபுரம் கணபதி நகரில் காமராஜ்-கவுசல்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாய தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஸ்ரீ செல்வக்ரிஷ் என்ற ஆண் குழந்தையும், ஜெஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

ராதாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் சிறுவன் ஸ்ரீ செல்வக்ரிஷ் 3-ம் வகுப்பும், ஜெஸ்ரீ 1-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இதில் ஸ்ரீசெல்வக்ரிஷ் 1-ம் வகுப்பில் இருந்தே பேச்சு போட்டியில் கலந்து கொண்டு பேசி ஏராளமான பரிசுகளை வாங்கி உள்ளார்.

புத்தகங்கள் படிப்பதை சிறுவயதில் இருந்தே பழக்கமாக கொண்டுள்ள அவர் தனது வீட்டில் வைத்து கம்பராமாயணம் பாடலை பாடி உள்ளார். அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் அவரது பெற்றோர் வெளிட்டுள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Similar News