தமிழ்நாடு

கடந்த 10 நாட்களில் கலை கல்லூரிகளில் சேருவதற்கு 3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

Published On 2022-07-01 09:18 GMT   |   Update On 2022-07-01 09:18 GMT
  • அரசு கல்லூரிகளை பொறுத்தவரை பொறியியல் மாணவர் சேர்க்கையை போல் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
  • தனியார் கல்லூரிகளில் பி.காம்., பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ. பாட பிரிவுகளுக்கு ஏராளமானவர்கள் மோதுகிறார்கள்.

சென்னை:

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதும் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் தயாராகி வருகிறார்கள்.

மாநிலம் முழுவதும் 163 அரசு கலைக்கல்லூரிகள் உள்ளன. இது தவிர தனியார் கலைக்கல்லூரிகளும் உள்ளன.

கடந்த 22-ந்தேதி முதல் விண்ணப்பித்து வருகிறார்கள். முன்பு போல் விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து வழங்கும் நடைமுறை இப்போது கிடையாது. ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி இதுவரை 3 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

வழக்கம் போல் இந்த ஆண்டும் கலைக்கல்லூரிகளில் சேருவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

குறிப்பாக போட்டித் தேர்வுகள் எழுதி வேலைவாய்ப்பை பெறுவதற்காக பி.காம் பாட பிரிவை தேர்வு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

அரசு கல்லூரிகளை பொறுத்தவரை பொறியியல் மாணவர் சேர்க்கையை போல் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

தனியார் கல்லூரிகளில் பி.காம்., பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ. பாட பிரிவுகளுக்கு ஏராளமானவர்கள் மோதுகிறார்கள். இதை சாதகமாக்கி பி.காம் படிப்பில் சேர ரூ.5 லட்சம் வரை சில கல்லூரிகளில் நன்கொடையும் வசூலிக்கப்படுகிறது.

Tags:    

Similar News