தமிழ்நாடு செய்திகள்

சேலத்தில் 103 டிகிரி வெயில்- பொதுமக்கள் கடும் அவதி

Published On 2023-04-16 10:20 IST   |   Update On 2023-04-16 10:20:00 IST
  • வாரம் முழுவதும் வெயில் அளவு 100 டிகிரிக்கு மேல் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • மதிய நேரங்களில் வெளியே நடக்க முடியாத நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

சேலம்:

கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே, சேலத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. சேலத்தில், நேற்று முன்தினம் 103.7 டிகிரி பாரன்ஹீட்டாக வெப்ப நிலை பதிவாகி இருந்த நிலையில், நேற்று 103.1 டிகிரியாக பதிவாகி இருந்தது. இன்றும் 103 டிகிரிக்கு அதிகமாக பதிவானது.

இந்த வாரம் முழுவதும் வெயில் அளவு 100 டிகிரிக்கு மேல் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி வெப்ப நிலை அதிகரிக்கிறது.

கடந்த 14-ம் தேதி அதிகபட்சமாக 105.7 டிகிரி பதிவானது. வெயில் தாக்கம் அதிகரிப்பால், மதிய நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்லும் இளம்பெண்கள் முகத்தை துப்பட்டா, சேலையால் மூடிக்கொண்டும், கைகளில் கிளவுஸ் மாட்டிக்கொண்டு பயணிக்கின்றனர். பகல் நேரங்களில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கும் மக்கள், பெரும்பாலும் மாலை நேர பயணத்தையே மேற்கொள்கின்றனர். சேலம் மாநகரில் போதிய மரங்கள் இல்லாததால் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. இதனால் மதிய நேரங்களில் வெளியே நடக்க முடியாத நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் காலை முதல் மாலை வரை நிலவிய கடும் வெயிலால் இரவில் வீடுகளில் கடும் புழுக்கம் நிலவி வருகிறது. இதனால் இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.

Tags:    

Similar News