தமிழ்நாடு

பிடிப்பட்ட நல்ல பாம்பை காணலாம்

கடலூரில் வீட்டுக்குள் புகுந்து குட்டி பாம்பை விழுங்கிய நல்ல பாம்பு

Published On 2022-12-22 04:24 GMT   |   Update On 2022-12-22 04:26 GMT
  • சுவர் விரிசலின் வழியாக பார்த்தபோது ஒரு பாம்பு இருந்தது தெரிய வந்தது.
  • பாம்பு மீது ஏதேனும் பொருட்கள் பட்டால் உடனடியாக அருகாமையில் உள்ளவர்களை கடித்து விடும். அதன் காரணமாக உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.

கடலூர்:

கடலூர் அருகே தூக்கணாம்பாக்கம் சேர்ந்தவர் கவிதா. இவர் வீட்டில் சமைத்துக்கொண்டு இருந்தபோது குட்டி பாம்பு ஒன்று வீட்டுக்குள் வந்தது. இதனை தொடர்ந்து பெரிய பாம்பும் பின் தொடர்ந்து சென்று உள்ளது.

அதிர்ச்சி அடைந்த கவிதா மற்றும் அவர்களது பிள்ளைகள் பாம்பை தேடி பார்த்து உள்ளனர். ஆனால் பாம்பு தென்படவில்லை. பின்னர் சிறிது நேரத்தில் வீட்டின் சுவர் விரிசலில் பாம்பு சண்டையிடும் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து உடனடியாக வன ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் செல்லா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். பின்னர் சுவர் விரிசலின் வழியாக பார்த்தபோது ஒரு பாம்பு இருந்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து சுவரை உடைத்து உள்ளே இருந்த பாம்பை லாபகமாக பிடித்தார். அந்த பாம்பு 5 அடி நீள நல்ல பாம்பு என தெரிய வந்தது. ஆனால் அந்த பாம்பு ஒரு இரையை விழுங்கி இருந்ததால் நகர முடியாமல் தவித்தது. பின்னர் ஒரு சில நிமிடத்தில் தான் உண்ட இரையை வெளியே கக்கும்போது அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. இதில் குட்டி நல்ல பாம்பை தனது இறையாக விழுங்கியது தெரியவந்தது. பின்னர் பாம்பு தான் விழுங்கிய குட்டி பாம்பை வெளியில் கக்கியது.

இதனை தொடர்ந்து வன அலுவலர் செல்லா, பிடிபட்ட நல்ல பாம்பை பாட்டிலில் அடைத்தார். அப்போது வீட்டின் உரிமையாளர் கவிதா நல்ல பாம்பு சாமி பாம்பாகும். ஆகையால் அதனை பாதுகாப்பான இடத்தில் விட வேண்டும்.

மேலும் எனது கணவர் இறப்பதற்கு முன்பு 2 பாம்பு ஒன்றாக இருந்தபோது அதில் ஒரு பாம்பை அடித்ததால் இறந்தது. அதன் பின்பு சில மாதங்களில் எனது கணவர் இறந்து விட்டார்.

தற்போது இந்த நல்ல பாம்பு அடிக்கடி எங்கள் வீட்டு பகுதிக்கு வந்து செல்லும். இதுவரை எங்களை எதுவும் செய்ததில்லை. ஆகையால் இது சாமி பாம்பு என கூறினார்.

அப்போது செல்லா பாம்பு மீது ஏதேனும் பொருட்கள் பட்டால் உடனடியாக அருகாமையில் உள்ளவர்களை கடித்து விடும். அதன் காரணமாக உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆகையால் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு நீங்கள் ஒத்துழைக்கக் கூடாது. மேலும் இந்த பாம்பை பாதுகாப்பான காட்டுப் பகுதியில் விடுவதன் மூலம் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படாது என கூறி அங்கிருந்து நல்ல பாம்பை கொண்டு சென்றார். இந்த சம்பவத்தால் இந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News