தமிழ்நாடு செய்திகள்

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்- மனைவி பிரசவத்திற்கு சென்றிருந்த நிலையில் அத்துமீறல்

Published On 2023-01-04 10:20 IST   |   Update On 2023-01-04 10:20:00 IST
  • சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்த அவரது தாயார் மாணவியிடம் விசாரித்தார்.
  • சிறுமியை டாக்டரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்ததில் மாணவி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் அருகே வசிப்பவர் சலீம் (21 வயது) கூலி தொழிலாளி. இவரது மனைவி கடந்த ஆண்டு பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு சென்றிருந்தார். இதன் காரணமாக சலீமுக்கு உறவினர் குடும்பத்தினர் தினமும் சாப்பாடு வழங்கி வந்தனர்.

இந்த நிலையில் சலீமுக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்த 9ம் வகுப்பு மாணவியை கடந்த ஜூன் மாதம் மிரட்டி அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இந்த சம்பவத்தை அடிக்கடி சொல்லி சிறுமியை பயமுறுத்தி தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்த அவரது தாயார் மாணவியிடம் விசாரித்தார். அப்போது நடந்ததை சிறுமி கூறியுள்ளார்.

பின்னர் சிறுமியை டாக்டரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்ததில் அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வாசுகி வழக்கு பதிவு செய்து சலீமை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News