தமிழ்நாடு

ஆர்எஸ்எஸ் ஊர்வலம்

சங்கரன்கோவிலில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு

Published On 2022-09-29 05:27 GMT   |   Update On 2022-09-29 05:27 GMT
  • தமிழகம் முழுவதும் 50 இடங்களில் வருகிற 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
  • தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு ஆர்.எஸ்.எஸ். சார்பில் அந்த அமைப்பின் சங்கரன்கோவில் நகர செயலாளர் ஆழ்வார் என்பவர் மனு அளித்திருந்தார்.

சங்கரன்கோவில்:

தமிழகம் முழுவதும் 50 இடங்களில் வருகிற 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு இடத்தில் ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு ஆர்.எஸ்.எஸ். சார்பில் அந்த அமைப்பின் சங்கரன்கோவில் நகர செயலாளர் ஆழ்வார் என்பவர் மனு அளித்திருந்தார்.

அந்த மனு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜிக்கு பரிசீலனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறி அனுமதிக்கான மனுவை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் நிராகரித்தார். இதையடுத்து வருகிற 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். சார்பில் கோரப்பட்டிருந்த ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

Tags:    

Similar News