தமிழ்நாடு

தூத்துக்குடிக்கு ரூ.1.75 கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்தி வந்தது யார்?- அதிகாரிகள் விசாரணை

Published On 2022-09-24 06:43 GMT   |   Update On 2022-09-24 06:43 GMT
  • மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் வந்த ஒரு கண்டெய்னரை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
  • கடத்தலில் தூத்துக்குடியை சேர்ந்தவர்களுக்கு தொடர்புள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் இருந்து போதைப்பொருட்கள் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனை தடுக்க மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் வந்த ஒரு கண்டெய்னரை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் 10 டன் எடையிலான ரூ.1.75 கோடி மதிப்பிலான பாப்பி சீட் எனும் போதைப்பொருள் கடத்தி கொண்டுவரப்பட்டது தெரிய வந்தது.

இதனை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் போதை பொருள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, இந்த கடத்தலில் தொடர்புடையவர்கள் யார்? யார்?, இந்த போதை பொருள் எங்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது? இதில் தூத்துக்குடியை சேர்ந்தவர்களுக்கு தொடர்புள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் தூத்துக்குடி மற்றும் மதுரையில் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News