தமிழ்நாடு

சென்னையை சுற்றிப்பார்க்க வந்த 3 மங்களூரு மாணவிகள் மீட்பு

Published On 2022-09-23 07:08 GMT   |   Update On 2022-09-23 07:08 GMT
  • சிறுமிகளை கண்ட ஆட்டோ டிரைவர் ஒருவர் உடனடியாக பஸ் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
  • விடுதி நிர்வாகிகளுக்கு தெரியாமல் சென்னையை சுற்றி பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் நண்பர்களான 3 பேரும் பஸ் மூலம் புறப்பட்டு கோயம்பேடு வந்தது தெரியவந்தது.

போரூர்:

கோயம்பேடு பஸ் நிலையத்தில் நள்ளிரவு 12 மணி அளவில் 3 சிறுமிகள் சந்தேகப்படும்படி சுற்றி திரிந்தனர்.

இதை கண்ட ஆட்டோ டிரைவர் ஒருவர் உடனடியாக பஸ் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் குணசேகரன் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராஜ் ஆகியோர் விரைந்து வந்து சிறுமிகளை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 3 பேரும் கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் என்பது தெரிந்தது.

அவர்கள் விடுதி நிர்வாகிகளுக்கு தெரியாமல் சென்னையை சுற்றி பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் நண்பர்களான 3 பேரும் பஸ் மூலம் புறப்பட்டு கோயம்பேடு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சிறுமிகள் 3 பேரையும் ஷெனாய் நகரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர். இது பள்ளி மங்களூருவில் உள்ள பள்ளி விடுதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News