தமிழ்நாடு

பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள்

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் 35 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2022-07-01 06:20 GMT   |   Update On 2022-07-01 06:20 GMT
  • திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ரேசன் அரிசி மூட்டையுடன் பதுங்கி இருந்த கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர்.
  • ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்து ரேசன் அரிசியை கடத்தி தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படை உதவி கமிஷனர் ஏ.கே. பிரீத் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் செபாஸ்டின் தலைமையில் போலீசார் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் ரேசன் அரிசி மூட்டையுடன் பதுங்கி இருந்த கும்பல் போலீசாரை கண்டதும் மூட்டைகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதை தொடர்ந்து போலீசார் அங்கிருந்த 35 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த ரேசன் அரிசியை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் திருவள்ளூர் வட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாவிடம் ஒப்படைத்தனர்.

மேலும் இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்து ரேசன் அரிசியை கடத்தி தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News