தமிழ்நாடு

பாம்பன் துறைமுகத்தில் 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

ராமேசுவரம் பகுதி மீனவர்கள் 8-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை

Published On 2022-08-10 05:23 GMT   |   Update On 2022-08-10 05:23 GMT
  • ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, ஏர்வாடி, வாலிநோக்கம், தொண்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
  • 8 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லததால் ரூ.8 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

ராமேசுவரம்:

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமேசுவரம் பாம்பன் துறைமுகத்தில் 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சூறாவளி காற்று வீசி வருவதால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் தற்போது புயல் சின்னமும் உருவாகி உள்ளதால் கடல் சீற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இதனால் ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுபடகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. அந்த தடை ஒரு வாரத்தை தாண்டி இன்றும் நீடிக்கிறது.

இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, ஏர்வாடி, வாலிநோக்கம், தொண்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் 8-வது நாளாக இன்றும் கடலுக்கு செல்லவில்லை.

இதனால் 1,200 விசைப்படகுகள் துறைமுகம் மற்றும் கடற்கரை பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லததால் நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்படுகிறது. 8 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லததால் ரூ.8 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.


Tags:    

Similar News