நெல்லை அருகே கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம் 6-வது நாளாக தொடர்கிறது- கண்களில் கறுப்பு துணி கட்டி பங்கேற்பு
- தூண்டில் வளைவு அமைக்க கோரி கிராம மக்கள் கடந்த 11-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- 5-ம் நாளான நேற்று அவர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் கூடுதாழையில் கடலரிப்பை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்க கோரி அக்கிராம மக்கள் கடந்த 11-ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தினந்தோறும் அவர்கள் ஆர்ப்பாட்டம், மனிதசங்கிலி, படகுகள் மீது கறுப்புக்கொடி ஏற்றுவது என ஒவ்வொரு வகையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 5-ம் நாளான நேற்று அவர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் 6-வது நாளான இன்று மீனவர்கள் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி குடும்பத்தினருடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
அப்போது அவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கண்களில் கறுப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மீனவர்கள் கூறும்போது, கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றனர்.