தமிழ்நாடு

விசாரணையின் போது காவல் துறையினர் என்னை துன்புறுத்தவில்லை- சவுக்கு சங்கர்

Published On 2024-05-22 11:13 GMT   |   Update On 2024-05-22 11:13 GMT
  • சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவல் ஜூன் 5 வரை நீட்டிக்கபட்டுள்ளது.
  • பெண் காவல் துறையினரின் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார்.

சவுக்கு சங்கர் தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது, சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் இருந்த பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை போலீசார் வழக்கு தொடர்பாக கைது செய்தனர்.

இந்நிலையில் சவுக்கு சங்கரை 7 நாட்கள் காவலில் விசாரிக்க கோரி தேனி போலீசார் மனு இன்று மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிபதி செங்கமலச் செல்வன், சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

2 நாட்கள் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில், இன்று மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இந்த வழக்கின் விசாரணையில் காவல்துறையினர் என்னை துன்புறுத்தவில்லை என்று சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவல் ஜூன் 5 வரை நீட்டிக்கப்படுவதாக நீதிபதி செங்கமலச் செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பெண் காவல் துறையினரின் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார்.

Tags:    

Similar News