தமிழ்நாடு செய்திகள்

திண்டுக்கல் ரெயில்நிலையத்தில் போலீசார் சோதனை நடத்திய காட்சி.

பிரதமர் வருகை எதிரொலி- திண்டுக்கல், கொடைரோடு ரெயில் நிலையங்களில் அதிரடி சோதனை

Published On 2022-11-11 11:18 IST   |   Update On 2022-11-11 11:18:00 IST
  • பிரதமர் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைரோடு ரெயில் நிலையங்களில் இன்று தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
  • சந்தேகப்படும்படி நபர்கள் தெரிந்தால் அவர்கள் தனியாக அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டனர்.

திண்டுக்கல்:

பிரதமர் நரேந்திரமோடி திண்டுக்கல் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாகவே திண்டுக்கல்-மதுரை வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.

சின்னாளபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைரோடு ரெயில்நிலையங்களில் இன்று தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. திண்டுக்கல் இருப்புபாதை எல்லைக்குட்பட்ட மெட்டூர் ரெயில்வேபாலம் மற்றும் முருகன்பட்டி ரெயில்வே பாலங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் தனிப்பிரிவு காவலர் ராஜேஸ்குமார், போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்ட போலீசார் ரெயில்நிலையங்களுக்கு வரும் பயணிகளை சோதனை நடத்தி அவர்கள் கொண்டுவந்த உடமைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

ஏதேனும் சந்தேகப்படும்படி நபர்கள் தெரிந்தால் அவர்களை தனியாக அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டனர். இன்று மாலை வரை இந்த சோதனை தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News