தமிழ்நாடு

தொடர் விடுமுறையையொட்டி குற்றாலத்தில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்

Published On 2023-07-30 05:58 GMT   |   Update On 2023-07-30 05:58 GMT
  • மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
  • சாரல் மழை நீடித்தால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்காசி:

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த வாரம் பெய்த தொடர் சாரல் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளான மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் தென்காசி மாவட்டத்திற்கு விடுமுறை என்பதால் உள்ளூர் சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் குற்றால அருவிகளில் குளிக்க வந்திருந்தனர்.

மேலும் வெளியூர்களில் இருந்தும் குறிப்பாக அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்தனர்.

இன்று காலையில் குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் வந்து குவிந்திருந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் அருவி கரைகளை ஒட்டி அமைந்துள்ள கடைகளில் உணவுப் பொருட்கள் மற்றும் பழங்களை வாங்கி ருசித்து மகிழ்ந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள கடைகளிலும் வியாபாரம் களைகட்டி காணப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகள் முழுவதும் காலை முதல் வெயில் மற்றும் காற்று வீசி வருகிறது. சாரல் மழை நீடித்தால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News