திரிசங்கு சொர்க்கத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்
- கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. அசோகன் ஓ.பி.எஸ்.சின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.
- அடுத்த சில நாட்களில் இருக்கும் ஒரு சிலரும் விலகி எடப்பாடி பக்கம் ஓடி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ஓ.பன்னீர்செல்வம் அணியில் வைத்திலிங்கம் (ஒரத்தநாடு), மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம்), ஐயப்பன் (உசிலம்பட்டி) ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். முக்கிய நிர்வாகிகள் விரல்விட்டு எண்ணும் நிலையில் ஓரிருவர்தான் இருக்கிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. அசோகன் ஓ.பி.எஸ்.சின் தீவிர ஆதரவாளராக இருந்தார். இப்போது அங்கிருந்து விலகி எடப்பாடி பழனிசாமியின் 'கிரீன்' சிக்னலுக்காக காத்திருக்கிறார்.
இப்போது பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கும் ஓ.பி.எஸ்.சை கைவிட்டுவிட்டதால் 3 எம்.எல்.ஏ.க்களும் ஊசலாட்டத்தில் இருக்கிறார்கள். பெரும்பாலும் எல்லா நிர்வாகிகளும் திரிசங்கு சொர்க்க நிலையில்தான் இருப்பது போல் முணுமுணுக்கிறார்கள்.
அடுத்த சில நாட்களில் இருக்கும் ஒரு சிலரும் விலகி எடப்பாடி பக்கம் ஓடி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டிக்காக்க என்ன வழி என்று தெரியாமல் தியானத்தில் அமர்ந்து ஓ.பன்னீர்செல்வம் யோசிக்கிறாராம்.