தமிழ்நாடு

விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை கணக்கிட புதிய நடைமுறை: அரசாணை வெளியீடு

Update: 2022-06-28 06:02 GMT
  • 57 வயதில் விருப்ப ஓய்வு பெற்றால் 3 ஆண்டுகளும், 59 வயதில் விருப்ப ஓய்வு கொடுத்தால் அவர் 60 வயது பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும்.
  • விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை:

அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58 ஆக இருந்தபோது அரசு ஊழியர் ஒருவர் 54 வயது மற்றும் அதற்கு குறைந்த வயதில் விருப்ப ஓய்வு பெற்றிருந்தால் அவர்களுக்கு கூடுதலாக 5 ஆண்டு பணியாற்றியதாக 'வெயிட்டேஜ்' கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் அவருக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் 54-க்கு பதிலாக 56 வயது மற்றும் அதற்கு கீழ் வயதில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றால் அவருக்கு 4 ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு 60 ஆண்டுகள் அவர் பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும்.

அதேபோல் 57 வயதில் விருப்ப ஓய்வு பெற்றால் 3 ஆண்டுகளும், 59 வயதில் விருப்ப ஓய்வு கொடுத்தால் அவர் 60 வயது பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News