தமிழ்நாடு

முக ஸ்டாலின்

போதை பாதை அழிவு பாதை... மன்றாடி கேட்கிறேன், விட்டு விடுங்கள்- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Published On 2022-08-11 09:37 GMT   |   Update On 2022-08-11 09:37 GMT
  • போதை பொருள் விழிப்புணர்வு காவலர்களாக பெற்றோர் இருக்க வேண்டும்.
  • போதை பொருளுக்கு எதிராக பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் தான் சேர்ந்து தடுக்க முடியும்.

சென்னை:

சென்னை கலைவாணர் அரங்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போதை பொருளுக்கு எதிரான உறுதி மொழி ஏற்ற நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதாவது:-

போதை மருந்து விற்பனை செய்யக்கூடிய குற்றம் செய்பவர்களை தனிப்பட்ட குற்றவாளி என கருத முடியாது. அது சமூக சீர்கேடு. இது சமூகத்தையே அழித்து விடும்.

போதை பொருள் விழிப்புணர்வு காவலர்களாக பெற்றோர் இருக்க வேண்டும். போதை பாதை அழிவு பாதை தான் இதற்கு எதிராக பெற்றோர்கள், ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

போதை பழக்கத்ததால் உடல்நிலை பாதிக்கப்படும். அதை விலை கொடுத்து வாங்கலாமா இதில் இருந்து விடுபட வேண்டும்.

எனவே போதை பொருள் பழக்கத்திற்கு உட்பட்டவர்களை மன்றாடி கேட்கிறேன். விட்டு விடுங்கள் இது தனி மனித பிரச்சினை அல்ல சமூக பிரச்சினை.

போதை பொருளுக்கு எதிராக பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் தான் சேர்ந்து தடுக்க முடியும். போதைக்கு காரணங்களை தேடாதீர்கள். இது சமூகத்தையே அழித்து விடும்.

கொலை-கொள்ளை போன்ற குற்றச்செயலுக்கு போதை பழக்கம் தான் காரணம். போதை பழக்கம் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கி விடும். எனவே இதில் இருந்து விடுபட வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags:    

Similar News