தமிழ்நாடு

ஒப்பந்த நர்சு சங்கத்துடன் மா.சுப்பிரமணியன் இன்று மாலை பேச்சுவார்த்தை- போராட்டம் முடிவுக்கு வருமா?

Published On 2023-01-07 07:35 GMT   |   Update On 2023-01-07 07:35 GMT
  • அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், புதிதாக தொடங்கப்பட இருக்கும் 708 நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மீண்டும் பணி வழங்கப்படும்.
  • சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அனைத்தும் நடத்தப்பட்டே பணியில் சேர்த்தனர் என்று நர்சுகள் தரப்பில் கூறப்படுகிறது.

சென்னை:

கொரோனா நெருக்கடி காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 2300 செவிலியர்களின் பணிக்காலம் கடந்த 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. அதன்பிறகு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், புதிதாக தொடங்கப்பட இருக்கும் 708 நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மீண்டும் பணி வழங்கப்படும். சம்பளமும் ரூ.14 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

ஆனால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகிறார்கள்.

இதற்கிடையில் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அனைத்தும் நடத்தப்பட்டே பணியில் சேர்த்தனர் என்று நர்சுகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சுகாதார துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள். இன்று மாலையில் நர்சுகள் சங்கத்தினருடன் டி.எம்.எஸ்.சில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் பேச்சுவார்த்தை நடக்கிறது. எனவே போராட்டம் முடிவுக்கு வருமா? என்பது இன்றைய பேச்சுவார்த்தைக்கு பிறகு தெரியவரும்.

Tags:    

Similar News