தமிழ்நாடு செய்திகள்

வித்தியாச கட்டணம் நடத்துனர்கள் மூலம் திரும்ப வழங்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு

Published On 2024-01-01 12:47 IST   |   Update On 2024-01-01 13:11:00 IST
  • தென் மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்தவர்களுக்கு கிளாம்பாக்கம் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.
  • அரசு விரைவு பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்தவர்களுக்கு வித்தியாச கட்டணத்தை திரும்ப வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் 30 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்த பயணிகளிடம் சென்னை கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் அதேபோன்று தென் மாவட்டங்களில் இருந்து சென்னை கோயம்பேட்டிற்கும் பயணம் செய்வதற்காக பெறப்பட்ட கட்டணத்தில் தற்போது கிளாம்பாக்கம் வரை மட்டுமே அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படுவதால் கட்டண வித்தியாசத்தொகை கண்டக்டர்கள் மூலம் பயணம் தொடங்கும்போது ரொக்கமாக திருப்பி அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஏற்கனவே அவர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்ப்பதற்காகவும், அதில் உள்ள சில நடைமுறை சிக்கல்களை தவிர்ப்பதற்காகவும் இவ்வாறு நடைமுறைபடுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News