தமிழ்நாடு செய்திகள்
null

ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்

Published On 2023-10-19 18:15 IST   |   Update On 2023-10-19 18:44:00 IST
  • மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மரணமடைந்துள்ளதாக தகவல்.
  • ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் குருவாக விளங்கியவர்.

ஆன்மீகவாதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் (82) மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

பங்காரு அடிகளார் மேல்மருவத்தூரில் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி குருவாக இருந்தார்.

ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையை அமல்படுத்தி பெரும் புரட்சி செய்தார்.

பங்காரு அடிகளாரின் ஆன்மீக சேவையை பாராட்டி கடந்த 2019ம் ஆண்டில் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

சித்தர் பீடம், கல்வி நிறுவனங்கள் மூலம் ஏராளமான சமூக சேவைகளையும் செய்தவர்.

மேல்மருவத்தூர் சித்தர் பீட கருவறையில் அபிஷேக ஆராதனை செய்ய பெண்களை அனுமதித்தவர் பங்காரு அடிகளார்.

அவர், ஆதிபராசக்தி மருத்துவ கல்வி மற்றும் பண்பாட்டு அறக்கட்டளையின் தலைவராக விளங்கி வந்தார்.

பங்காரு அடிகளாரை பின்பற்றும் பக்தர்கள் 15 நாடுகளில் உள்ளனர்.

Tags:    

Similar News