தமிழ்நாடு

மருத்துவ மாணவர் சேர்க்கை: தரவரிசை பட்டியல் வெளியீடு

Published On 2022-10-17 04:12 GMT   |   Update On 2022-10-17 04:12 GMT
  • மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.
  • எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர அக்டோபர் 6ம் தேதிவரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

சென்னை:

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் தமிழக அரசால் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். இக்கலந்தாய்வை அரசு சார்பில் மாநில மருத்துவக் கல்வி இயக்ககம் நடத்துகிறது. மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.

அவ்வகையில் நடப்பு கல்வி ஆண்டில் (2022-2023) அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் பதிவு கடந்த மாத இறுதியில் தொடங்கியது. அக்டோபர் 6ம் தேதிவரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்நிலையில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார்.

Tags:    

Similar News