தமிழ்நாடு

பல கோடி ரூபாய் ஊழல் புகார்- மதுரை சிறை அதிகாரிகள் உள்பட 9 பேர் இடமாற்றம்

Published On 2022-12-08 04:09 GMT   |   Update On 2022-12-08 04:09 GMT
  • சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஸ் பூஜாரி, மதுரை மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டார்.
  • சிறையில் பணியாற்றிய 9 பேரை வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்து சிறைத்துறை டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

மதுரை:

மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்ததில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக சில மாதங்களுக்கு முன்பு வக்கீல் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனாலும் அது தொடர்பான எவ்வித அறிக்கையும் நிர்வாகத்தில் இருந்து தெரிவிக்கப்படவில்லை. மேலும் அந்த புகார் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாத நிலையில் சிறையில் அதிகாரிகளால் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒரு சில மோசடி நடந்தது உண்மை என்பது தெரியவந்ததில் அங்கு பணிபுரியும் சிலரிடம் அது தொடர்பான பணத்தையும் சிறை நிர்வாகம் பிடித்தம் செய்ததாக கூறப்படுகிறது.

சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஸ் பூஜாரி, மதுரை மத்திய சிறையில் ஆய்வு மேற்கொண்டார். அவரும் இது குறித்து விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிறையில் பணியாற்றிய 9 பேரை வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்து சிறைத்துறை டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News