தமிழ்நாடு

லீனா மணிமேகலையை கைது செய்யுங்கள்... டுவிட்டரில் டிரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்

Published On 2022-07-04 04:57 GMT   |   Update On 2022-07-04 10:55 GMT
  • காளி சிகரெட் புகைப்பது போன்று வெளியிடப்பட்டுள்ள போஸ்டருக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
  • இந்துக்கள் குறிவைக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.

சென்னை:

ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை தான் இயக்கி உள்ள 'காளி' என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த போஸ்டரில் இந்துக்களின் கடவுளான மகா காளி, சிகரெட் புகைப்பது போன்றும், ஒரு கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தியபடியும் இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்து கடவுளை அவமதிக்கும் விதமாக வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டருக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

டுவிட்டரில் #ArrestLeenaManimekalai என்கிற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது. லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் இந்து மதம் கேலி செய்யப்படுகிறது, இந்துக்கள் குறிவைக்கப்படுவதாகவும் பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.

Tags:    

Similar News