தமிழ்நாடு செய்திகள்

கரூரில் 5-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

Published On 2023-11-07 11:34 IST   |   Update On 2023-11-07 11:34:00 IST
  • கரூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் வருமான வரி சோதனை தொடங்கின.
  • தொடர்ந்து நள்ளிரவு வரை சுரேஷ் என்பவரின் நிதி நிறுவனம் மற்றும் அவரது வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.

கரூர்:

அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய இடங்களில் 3-ம் தேதி தொடங்கிய சோதனை பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் சோதனை தொடங்கின. கரூர் மாநகராட்சி பகுதியில் தி.மு.க.வை சேர்ந்த மறைந்த முன்னாள் கரூர் மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மாவின் வீடு, காந்திபுரம் பகுதியில் உள்ள சுரேஷ் என்பவர் நிதி நிறுவனம், வையாபுரி நகர் பகுதியில் உள்ள அவரது வீடு என தொடர்ந்து 3 இடங்களில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது.

4-வது நாளான நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை முடிவில் மறைந்த முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மா என்பவரின் வீட்டில் சோதனை நிறைவடைந்தது.

தொடர்ந்து நள்ளிரவு வரை சுரேஷ் என்பவரின் நிதி நிறுவனம் மற்றும் அவரது வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சிறிய ஓய்வெடுப்பதற்காக தங்கும் விடுதிக்கு சென்ற அதிகாரிகள், 2 இடங்களிலும் மத்திய பாதுகாப்பு படை போலீசாரை பாதுகாப்பில் அமர்த்திவிட்டு சென்றனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் 5-வது நாளாக 2 இடங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News