தமிழ்நாடு

கொந்தகை அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழியில் இரும்பு வாள்-குவளைகள்

Update: 2022-09-30 02:57 GMT
  • கொந்தகையில் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சிக்காக 4 குழிகள் தோண்டப்பட்டன.
  • தாழிகளில் இருந்து எலும்பு துண்டுகள், மண்டை ஓடுகள் மற்றும் பல பொருட்கள் கிடைத்தன.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் அகழாய்வு பணி நடந்து வருகிறது. கொந்தகையில் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சிக்காக 4 குழிகள் தோண்டப்பட்டன. இதில் மொத்தம் 57 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் ஏற்கனவே பல முதுமக்கள் தாழிகள் திறக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டன.

தாழிகளில் இருந்து எலும்பு துண்டுகள், மண்டை ஓடுகள் மற்றும் பல பொருட்கள் கிடைத்தன. தற்போது 2-வது குழியில் உள்ள முழுமையான ஒரு முதுமக்கள் தாழியை திறந்து ஆய்வு செய்ததில் கருப்பு, சிவப்பு நிற குவளைகளும், இரும்பினாலான வாளும் கண்டெடுக்கப்பட்டன.

இந்த வாள் 40 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. மேலும், அது ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News