தமிழ்நாடு செய்திகள்

விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் முதல் ரீயூசபிள் ஹைப்ரிட் ராக்கெட்

Published On 2024-08-24 10:54 IST   |   Update On 2024-08-24 13:37:00 IST
  • 3.50 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் வானில், 80 கி.மீ. உயரே பறக்கக்கூடிய திறன் உடையது.
  • 3 செயற்கை கோள்களையும் பூமியிலிருந்து அதிகபட்சம் 80 கி.மீ. நிலைநிறுத்திவிட்டு ரூமி ராக்கெட் பூமிக்கு திரும்பி விடும்.

தமிழ்நாட்டைச் சேர்த்த ஸ்டார்ப் நிறுவனமான ஸ்பேஸ் ஸோன் இந்தியா [Space Zone India] மார்ட்டின் குரூப் குழுமத்துடன் இணைத்து மறுபயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் 'மிஷன் ரூமி 2024' திட்டத்தின் கீழ் RHUMI 1 என்ற ராக்கெட்டை உருவாக்கி உள்ளது.


இதுவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ரீயூசபிள் ஹைப்ரிட் ராக்கெட் ஆகும். ஹைட்ராலிக் மொபைல் லாஞ்ச்பேடில் இருந்து இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டிற்கான ராக்கெட் சென்னை ஈசிஆர் கடற்கரையில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. மிஷன் ரூமி ராக்கெட்டில் உள்ள செயற்கைகோள்கள் சுற்றுச்சூழல் செயல்பாடுகள் பற்றி புரிதலை ஏற்படுத்தும்.

3.50 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் வானில், 80 கி.மீ. உயரே பறக்கக்கூடிய திறன் உடையது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டால், ஒரே ராக்கெட்டை பயன்படுத்தி, பல முறை செயற்கைக்கோளை ஏவலாம். இதனால் செலவு மிச்சமாகும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.


3 செயற்கை கோள்களையும் பூமியிலிருந்து அதிகபட்சம் 80 கி.மீ. நிலைநிறுத்திவிட்டு ரூமி ராக்கெட் பூமிக்கு திரும்பி விடும். வழக்கமான செயற்கைகோள்களை குறிப்பிட்ட சுற்றுவட்டப்பாதையில் செலுத்தியவுடன் ராக்கெட்டின் ஆயுட்காலம் முடிந்துவிடும்.

மிஷன் ரூமி ராக்கெட் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்திய பின் பூமிக்கு திரும்பும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News