பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலைகளை காணலாம்.
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4 ஐம்பொன் சிலைகள் உட்பட 6 சிலைகள் பறிமுதல்- 3 வாலிபர்கள் கைது
- ஒரு வீட்டில் ஐம்பொன் சாமி சிலைகள் பதுக்கி வைத்து இருப்பதாக ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- மேலும் ஐம்பொன் சிலைகள் கடத்தி வைக்கப்பட்டுள்ளதா, இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம், தாஜ் புரா, சத்யா நகர், திருதாமாந்தர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஐம்பொன் சாமி சிலைகள் பதுக்கி வைத்து இருப்பதாக ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இன்று காலை சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டின் அறையில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட முக்கால் அடி உயர முருகர் சிலை, கால் அடியில் 3 மாரியம்மன் சிலைகள் மற்றும் 2 பெரிய வெள்ளி சிலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சிலையை பறிமுதல் செய்து சாமி சிலைகளை கடத்தி பதுக்கி வைத்திருந்ததாக பாலாஜி வயது 39 காட்பாடி பாலாஜி நகரை சேர்ந்த தினேஷ்குமார் ஆற்காடு கன்னி கோவில் தெருவை சேர்ந்த முரளி கிருஷ்ணன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் ஐம்பொன் சிலைகள் எங்கிருந்து எப்போது கடத்தி வரப்பட்டது.
இதேபோல் மேலும் ஐம்பொன் சிலைகள் கடத்தி வைக்கப்பட்டுள்ளதா இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சாமி சிலைகளின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை.