தமிழ்நாடு செய்திகள்

'மெட்ராஸ்-ஐ' பாதிப்பில் இருந்து கண்களை பாதுகாப்பது எப்படி?

Published On 2022-11-04 14:06 IST   |   Update On 2022-11-04 14:06:00 IST
  • காலையில் தூங்கி எழும்போது கண்களில் இருந்து அழுக்கு வெளியேறி இமைகளை பிரிக்க முடியாதபடி ஒட்டி கொள்ளும்.
  • கண் வலி வந்தவர்கள் பயன்படுத்தும் டவல், போர்வை போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.

சென்னை:

சென்னையில் மெட்ராஸ்-ஐ என்ற கண் நோய் வேகமாக பரவி வருகிறது.

இந்த வெண்படல அழற்சி நோய்க்கு கண் எரிச்சல், கண்ணில் இருந்து நீர்வடிதல், கண் சிவந்து இருத்தல், வெளிச்சத்தை பார்க்க கூச்சம் ஆகியவை அறிகுறியாகும்.

காலையில் தூங்கி எழும்போது கண்களில் இருந்து அழுக்கு வெளியேறி இமைகளை பிரிக்க முடியாதபடி ஒட்டி கொள்ளும்.

உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் தீவிரமான பிரச்சினையாகி விடும். இதற்கு சுயமாக மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

மெட்ராஸ்-ஐ வைரஸ் தாக்கிய கண்களில் இருந்து சுரக்கும் திரவங்களின் வழியே மற்றவர்களுக்கு எளிதில் பரவும். எனவே கண்நோய் பாதித்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதை தவிர்க்க வேண்டும். கண்களில் இருந்து வெளியேறும் திரவத்தை துடைக்க 'டிஷ்யூ' பேப்பரை உபயோகப்படுத்தலாம் அல்லது மிகவும் மெல்லிய துணிகளை பயன்படுத்த வேண்டும்.

கண் வலி வந்தவர்கள் பயன்படுத்தும் டவல், போர்வை போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.

Tags:    

Similar News