தமிழ்நாடு செய்திகள்

விஷக்குளவி கொட்டி தொழிலாளி பலி: பேரன்கள் 2 பேருக்கு தீவிர சிகிச்சை

Published On 2023-09-20 12:18 IST   |   Update On 2023-09-20 12:18:00 IST
  • பேரன்கள் லட்சன், திலக் ஆகிய இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  • மகாதேவன் வீட்டின் அருகே செங்குளவி இருந்த பகுதிகளில் ரசாயன மருந்து கலந்த தண்ணீரை பீச்சியடித்து குளவிகளை விரட்டினர்.

மாமல்லபுரம்:

கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரத்தை சேர்ந்தவர் மகாதேவன் (வயது50). கட்டிட தொழிலாளி. இவர் வீட்டின் அருகே உள்ள முட்புதரை சுத்தம் செய்தார். அந்த நேரத்தில் அருகில் இருந்த பனை மரத்தின் காய்ந்த ஓலை ஒன்று கீழே விழுந்தது. அதில் இருந்த விஷமுள்ள செங்குளவிகள் பறந்து வந்து மகாதேவன் மற்றும் அருகில் நின்ற பேரன்கள் லட்சன், திலக் ஆகியோரை கொட்டியது. இதில் அவர்கள் 3 பேரும் வலியால் அலறி துடித்தனர். மேலும் அவர்களது உடல்நிலையும் மோசம் அடைந்தது.

இதைத்தொடர்ந்து மகாதேவன் உள்பட 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகாதேவன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது பேரன்கள் லட்சன், திலக் ஆகிய இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மகாதேவன் வீட்டின் அருகே செங்குளவி இருந்த பகுதிகளில் ரசாயன மருந்து கலந்த தண்ணீரை பீச்சியடித்து குளவிகளை விரட்டினர்.

இதுகுறித்து சதுரங்கபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News