தமிழ்நாடு

கோப்புபடம்

மே 3 வரை சுட்டெரிக்கும் வெயிலுக்கு லீவு - நான்கு மாவட்டங்களில் கனமழை!

Published On 2023-05-01 00:49 GMT   |   Update On 2023-05-01 00:49 GMT
  • பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
  • தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் ஓரளவுக்கு குறைந்தே காணப்படுகிறது.

தமிழ்நாட்டின் ஓரிரு பகுதிகளில் கனமழை, சில இடங்களில் லேசான மழை கடந்த ஒரு வார காலமாக பெய்து வருகிறது. கோடை வெயிலுக்கு விடுமுறை அளிக்கும் வகையில், மழை பெய்து வருவதால் வழக்கத்தை விட தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் ஓரளவுக்கு குறைந்தே காணப்படுகிறது.

இந்த நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்கில் கிழக்கு திசை காற்று, மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 1) துவங்கி முதல் மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யலாம். சேலம், தருமபுரி, நீலகிரி, ஈரோடு, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி போன்ற 17 இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

Tags:    

Similar News