தமிழ்நாடு

முகநூல் மூலம் குறைந்த விலையில் பொருட்கள் தருவதாக என்ஜினீயரிடம் மோசடி

Published On 2022-12-23 08:36 GMT   |   Update On 2022-12-23 08:36 GMT
  • ராணுவ அதிகாரி என்கிற பெயரில் “பழைய பர்னிச்சர்” பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை என்று அறிவிப்பு வந்தது.
  • திலீப்குமார் அளித்த புகாரின் பேரில் மோசடி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

வடபழனி, அழகிரி நகர் பகுதியை சேர்ந்தவர் திலீப்குமார். சாப்ட்வேர் என்ஜினீயர். இவரது முகநூல் பக்கத்தில் ராணுவ அதிகாரி என்கிற பெயரில் "பழைய பர்னிச்சர்" பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை என்று அறிவிப்பு வந்தது. அதில் இருந்த செல்போன் எண்ணை திலீப்குமார் தொடர்பு கொண்டு பொருட்களை வாங்கி கொள்வதாக கூறினார்.

அப்போது எதிர்முனையில் பேசிய மர்ம நபர் ரூ.30ஆயிரம் பணத்தை தனது வங்கி கணக்கிற்கு அனுப்பினால் உடனடியாக அனைத்து பர்னிச்சர் பொருட்களையும் வீட்டிற்கு டெலிவரி செய்வதாக தெரிவித்தார். இதை உண்மை என்று நம்பிய திலீப்குமார் உடனடியாக ரூ.30ஆயிரத்தை அனுப்பினார். பின்னர் அந்த நபர் திலீப்குமாரின் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. அவர் மோசடியில் ஈடுபட்டு இருப்பதை அறிந்து திலீப்குமார் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வடபழனி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News